Wednesday, 15 February 2012

ஆவியா? இல்லை பாவியா? இல்லை டிவி யா?

ஏ! என்திரப்ப் பெண்ணே!
உலகில் அழுவதும்,
அழ வைப்பதும்,
பெண்ணாகத்தான் இருக்க முடியும்.
அதனால் தான் உன்னை எந்திரப் பெண்ணென்று கூறினேன்.
நீ நினைத்தால்,
அரசியல்வாதியை ஆட்டம் காண வைக்க முடியும்,
பயங்கர வாதியை பயந்தோட செய்ய முடியும்,
கொடீஸ்வரனை தெருக்கோடிக்கு அனுப்ப முடியும்,
ஆண்டியை அரசனாக்க முடியும்,
பெண்களை அழ வைக்க முடியும்,
ஆண்களை அதிர வைக்க முடியும்,
அரசியலை சாக்கடையாக்க முடியும்,
சட்டத்தை சிதைத்து போட முடியும்,
தூரத்தை பக்கமாக்க முடியும்,
செய்தியை சீக்கிரம் சொல்ல முடியும்,
அசிங்கத்தை அழகாக்க முடியும்,
ஆதங்கத்தை கொட்டி தீர்க்க முடியும்,
பூமியை வளைத்து போட முடியும்,
ஆகாயத்தை வலம வரவும் முடியும்,
இத்தனை செய்யும் உன் பெயர் என்ன?
ஆவியா? இல்லை பாவியா? இல்லை டிவி யா?

முடிவு செய்து விட்டேன்!

எப்படி அறிவேன் காதலிக்காத பெண் ஒருத்தியை,
எப்படி சொல்வேன் காதலிக்கச் சொல்லி என்னை,
முடிவு செய்து விட்டேன்!
கண்ணில் கண்ட ஒவ்வொரு பெண்ணிடமும் காதலை சொல்வதென்று,
கணவன் இருந்தால் கடிக்கட்டும்,
காதலன் இருந்தால் முறைக்கட்டும்,
ஒதுங்கிக்கொல்வோம் இவள் வேண்டாம் என்று..

சிற்றின்பமா? பேரின்பமா?

சிற்றின்பம் என்பர் சிலர்,
பேரின்பம் என்பர் பலர்,
அறியத் தவிக்கிறேன்?
குழந்தை பெறுவது சிற்றின்பமா?
எய்ட்ஸ் பெறுவது பேரின்பமா?

வரதட்சணை ..

விளைந்த பொருளொன்று விற்பனைக்கு வருகிறதே ,
அதை விற்பவன் கொடுக்கிறான்,
பெறுபவன் எடுக்கிறான்
விளை பொருளுடன் வெகுமதியை.

பெண்ணே நீ நடந்து எனை பார்க்காதே

உன் கண்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும்,
என் கலைப்பை ஏனோ குறைக்கிறதே!
உன் இடைகள் சுண்டும் ஒவ்வொரு சுண்டிலும்,
என் இதயம் நூறாய் வெடிக்கிறதே!

விற்க மனமில்லை

விளை நிலமே!
உன்னை விற்க மனமில்லை,
என் மகள் மணம் முடிக்க!
அதை தவிர வழியில்லை.

கடல் தான் உந்தன் பினாமிய?

இரும்பால் ஆன இதயம் ஒன்று எங்கிருந்தோ வந்தது,
பூவாய் இருந்த உயிரை எல்லாம் பிரட்டிக் கொண்டு சென்றதே,
உன் பெயர் என்ன சுனாமிய?
கடல் தான் உந்தன் பினாமிய?

Tuesday, 14 February 2012

நாங்க நல்ல பசங்க..சொன்ன நம்புங்க....

ஒரே ஒரு பீடிய தான் ஒட்ட ஒட்ட இழுப்போம்,
எங்க ஊரு காட்டுக்குள்ள சிக்கன்தான் சமைப்போம்,
பீர் கூட ரம்மா வாங்கி மிக்ஸ் பண்ணி அடிப்போன்,
தெரிஞ்சவிங்க பாக்கும் போது ஸ்டடியாக நடப்போம்,
உள்ளுக்குள்ள நாங்க அப்பொ வானத்துல மிதப்போம்..
சில சமயம் ஊரு வம்ப வேண்டும் என்றே இழுப்போம்..
பல சமயம் பார்க்கும் பெண்ணை பார்வையிலே .....................?

tesseract OCR

http://tesseract-ocr.repairfaq.org/main.html

பூ வாசம் புறப்படும் பெண்ணே

செவ்வந்தி பூவினமே
சில்லென்ற காற்றினிலே
ஜிவ்வென்று ஈர்க்கிறது உன் மனமே,
உனை பூஜைக்கு வைத்திடவோ?
பூ கட்டி விற்றிடவோ?
புரியாமல் தவிக்கிறது என் மனமே!

14 வயதினிலே

14 வயதினிலே
பொன்வண்டு மேனியிலே
பருவப் பூ பூக்கிறதே!
பூத்தது முல்லையோ ?
உன் தந்தைக்கு தொல்லையோ?
தெரியவில்லை!

கழுத கவித

உயரே பறக்கும் ஊர்க்குருவி
உன்னிடம் வந்து சொன்னது காதல் ...!
உதிர்ந்து கிடக்கும் பூக்களும் கூட - உயிர்
துறந்து கொண்டே சொன்னது காதல்!
இரவில் ஒளிரும் வெண்ணிலவோ உன்னை
பகலில் பார்க்க துடிக்கிறதே!
பகலில் உதிக்கும் சூரியனோ
இரவே வேண்டாம் மறுக்கிறதே!

காதலியே!!!!!!!!

உண்மை சொல்லும் காவியமா?
உன் மேல் ஒட்டும் ஓவியமா ?
கைகள் எழுதும் கவிதை எல்லாம்
உன்னை மட்டும் வரைகிறதே!
காதல் சொல்லும் வார்த்தை எல்லாம்
உன் பெயர் மட்டும் சொல்கிறதே!
 

காதல் என் காதல்

          
காதல் ஒன்றும் காதல் இல்லை
காமம் மட்டும் துணை இல்லை என்றால்
வேறெதுவும் தேவை இல்லை
வெண்ணிலவே நீ என் பக்கம் நின்றாள்